பேர்ணாம்பட்டு அருகே ஆந்திர எல்லையில் உள்ள மலைப்பகுதிகளில் நக்சல்கள் நடமாட்டம்

வேலூர்:  வேலூர் மாவட்டத்தில் ராணிப்பேட்டை, பொன்னை, கிறிஸ்டியான்பேட்டை, குடியாத்தம், பேரணாம்பட்டு, ஆம்பூர், வாணியம்பாடி, நாட்றம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் ஆந்திர மாநில எல்லையையொட்டி அமைந்துள்ளது. இந்த, இரண்டு மாநிலங்களின் எல்லை பகுதிகளில் அடர்ந்த வனப் பகுதிகள் அமைந்துள்ளன. இந்த வனப்பகுதிக்குள் அருகில் உள்ள மலை கிராம மக்கள் கால்நடைகள் மேய்ச்சலுக்காகவும் விறகு சேகரிக்கவும் சென்று வருகின்றனர். இவர்களை தவிர்த்து வேறு யாரும் வனப்பகுதிக்குள் சென்று வர முடியாது.

 இந்நிலையில், பேரணாம்பட்டு அருகே உள்ள சாத்கர், அரவட்லா உள்ளிட்ட  மலைகிராம மக்கள் சமீப காலமாக வனப்பகுதிகளில் சந்தேகப்படும்படியான நபர்கள் நடமாடுவதாக தெரிவிக்கின்றனர். அவ்வாறு, வனப்பகுதியில் சுற்றித்திரியும் நபர்கள் நக்சல்கள் ஆக இருக்கலாம் என்று அச்சமடைந்துள்ளனர். மேலும், ஆம்பூர் வனப்பகுதிகளை ஒட்டி உள்ள ஊட்டல்,  துருகம் காப்புக் காடுகள் மற்றும் பேர்ணாம்பட்டு மலைப் பகுதியை ஒட்டியுள்ள அரவட்லா, சாத்கர், சாரங்கல் உள்ளிட்ட பல்வேறு வனப்பகுதிகளில் இரவு நேரங்களில் வெடிச்சத்தம் மற்றும் அச்சுறுத்தும் விதமான ஒலிகளும் கேட்பதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: