அமெரிக்காவுக்கு எதிராக அசாஞ்சே சட்ட போராட்டம்

லண்டன்: அமெரிக்காவுக்கு எதிராக சட்டப்போராட்டத்தை விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சே தொடங்கி யுள்ளார். ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் ஜூலியன் அசாஞ்சே (47). அமெரிக்காவின் ராணுவ ரகசியங்களை கம்ப்யூட்டர்களில் ஊடுருவி திருடியதாக குற்றச்சாட்டு உள்ளது. அவருக்கு ஈக்வடார் நாடு அடைக்கலம் அளித்தது. லண்டனில் உள்ள அந்நாட்டு  தூதரகத்தில் தங்கியிருந்த அவரை அமெரிக்காவின் வற்புறுத்தலால், ஈக்வடார் அரசு வெளியேற்றியது. இதையடுத்து, கடந்த மாதம் பிரிட்டன் போலீசார் அசாஞ்சேவை கைது செய்தனர்.

இந்நிலையில், சுவீடனில் கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் வழங்கிய ஜாமீன் நிபந்தனைகளை மீறியதாக அசாஞ்சே கைது செய்யப்பட்டு, லண்டனில் உள்ள பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் அமெரிக்க ராணுவ ரகசிய திருட்டு தொடர்பாக வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்த அந்நாட்டு வழக்கறிஞர்கள் வலியுறுத்தினர். இதற்கு, அசாஞ்சே கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த வழக்கில் அமெரிக்காவுக்கு நாடு கடத்துவதை எதிர்த்து போராட போவதாகவும் ஜூலியன் அசாஞ்சே தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: