வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை :சத்யபிரதா சாஹூ

சென்னை : வாக்கு எண்ணும் மையங்களில் செய்யப்பட்டு இருக்கும் பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் இன்று மாலை ஆலோசனை நடத்த இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். ஃபானி புயல் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர்கள் ஆலோசனை நடத்த கடந்த 30ம் தேதியே அனுமதி அளிக்கப்பட்டு விட்டதாக கூறிய அவர், தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த 2,202 கிலோ தங்கத்தில் 14 கிலோவை தவிர மற்ற அனைத்தும் திருப்பி கொடுக்கப்பட்டு விட்டதாக தெரிவித்தார்.

இதனிடையே வாக்கு எண்ணும் மையங்களில் செய்யப்பட்டு இருக்கும் பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் இன்று மாலை 4 மணிக்கு காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்த இருப்பதாக சத்யபிரதா சாஹூ கூறினார். மேலும் தேர்தல் கருத்து கணிப்புகளை வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சத்யபிரதா சாஹூ எச்சரித்தார்.

இந்த நிலையில் ஏப்ரல் 20ம் தேதி வரை மதுரை மக்களவைத் தொகுதியின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு இருக்கும் 6 அறைகள் சீல் வைக்கப்படவில்லை என்ற புகாரில் உண்மை இல்லை எனவும் சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார். இதே போல உளவுத்துறை டிஜிபி ஐ.ஜி. சத்தியமூர்த்தியை மாற்ற வேண்டும் என்ற தமிழக தேர்தல் டிஜிபி அசுதோஷ் ஷுக்லாவின் பரிந்துரையை தேர்தல் ஆணையத்திற்கு தாம் அனுப்பியதாகவும் அதன் மீது இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் சத்யபிரதா சாஹூ விளக்கம் அளித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: