இன்ஜின் பழுதானதால் ஏர் இந்தியா நிறுவனத்தின் 20 விமானங்கள் நிறுத்தம்

புதுடெல்லி: ஏர் இந்தியா நிறுவனத்தின் 20 விமானங்கள், பழுது காரணமாக இயக்க முடியாமல் நிறுத்தப்பட்டுள்ளன. ஏர் இந்தியா நிறுவனம் கடன் சுமையால் தவித்து வருகிறது. விமானங்களை பராமரிக்கவோ, பழுது நீக்கவோ கூட நிதி இல்லாத நிலை உருவாகியுள்ளது. இந்த நிறுவனத்தின் 127 விமானங்களில் 20 விமானங்கள் பழுது காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த விமானங்களின் இன்ஜினை மாற்றினால்தான் மீண்டும் இயக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு குறைந்தது ரூ.1,500 கோடி தேவை. ஆனால், புதிய இன்ஜின் மாற்ற தேவையான நிதி இல்லை.

இதில் 14 விமானங்கள் ஏ320 ரக விமானங்கள் 4 விமானங்கள் போயிங் 787-800 டிரீம் லைனர் விமானங்கள், எஞ்சிய 2 விமானங்கள் போயிங் 777 ரகத்தை சேர்ந்தவை என ஏர் இந்தியா அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிறுவனத்தின் 19 விமானங்கள், உதிரி பாகங்கள் மாற்றப்படாததால் தரையிறக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக, இந்திய வர்த்தக விமானிகள் சங்கம் கடந்த ஆகஸ்ட் மாதம் தெரிவித்திருந்தது. விமானத்தை இயக்க முடியாததால் நிறுவனத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: