நந்தியாலா மக்களவை தொகுதியின் ஜனசேனா வேட்பாளர் ரெட்டி திடீர் மரணம்

திருமலை: ஆந்திராவில் நந்தியாலா மக்களவை தொகுதியில் போட்டியிட்ட ஜனசேனா வேட்பாளர் எஸ்.பி.ஒய்.ரெட்டி திடீரென மரணமடைந்தார். ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் உள்ள நந்தியாலா மக்களவை தொகுதியில் 3 முறை எம்பி.யாக பதவி வகித்தவர் எஸ்.பி.ஒய்.ரெட்டி. தொழிலதிபரான இவர், பல கல்வி நிறுவனங்களை நடத்தி வந்தார். கடந்த 1991ம் ஆண்டு பாஜ.வில் இணைந்து நந்தயாலா தொகுதி எம்பி.யாக போட்டியிட்டு தோல்வியடைந்தார்.  மேலும், கிந்தலூறு  சட்டப்பேரவை தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக  போட்டியிட்டு தோல்வி அடைந்தார். கடந்த 2004, 2009ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் சார்பில் நந்தியாலா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

பின்னர், 2014ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து, போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர், அதே ஆண்டு அக்கட்சியில் இருந்து விலகி தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார். தொடர்ந்து இந்த முறை நடைபெற்ற தேர்தலிலும் நந்தியாலா தொகுதியில் போட்டியிடுவதற்கு தெலுங்கு தேச கட்சியின் சார்பில் விருப்ப மனு அளித்தார். ஆனால், அவருக்கு வாய்ப்பு தராததால் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிக்கு தாவினார். அந்த கட்சியின் சார்பில், நந்தயாலா தொகுதி வேட்பாளராக போட்டியிட்டார். இந்நிலையில், கடந்த மாதம் 3ம் தேதி முதல் சிறுநீரகம் மற்றும் இருதய நோயால்  பாதிக்கப்பட்டு ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.ஒய். ரெட்டில நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: