ஒடிசா மக்கள் மட்டுமல்ல, அரசியல்வாதிகளும் இனி கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம். அங்கு நான்காவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. ஒன்றரை மாதங்களுக்கும் மேலாகத் தொடர்ந்த தேர்தல் திருவிழா இன்றோடு முடிவுக்கு வருகிறது. தேர்தல் ரேசில், ஆளும் பிஜேடி (பிஜூ ஜனதா தளம்) கட்சி முன்னணியில் இருந்தாலும், முதல்வர் நவீனுக்கு பாஜ இம்முறை செம டார்ச்சர் கொடுத்ததை மறுக்க முடியாது. நடந்து முடிந்த மூன்று கட்ட வாக்குப்பதிவில் பல இடங்களில் நடந்த அடிதடி, வன்முறை, வாக்கு இயந்திரங்கள் உடைப்பு போன்ற சம்பவங்களே அதற்குச் சாட்சி. உச்சக்கட்டமாக, கஞ்சம் மாவட்டத்தில் உள்ள அஸ்கா மக்களவைத் தொகுதிக்குட்பட்ட ரெந்தி கிராமத்தில் வாக்குப்பதிவின் போது, வாக்குப்பதிவு இயந்திரம் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவவத்தில் பாஜ வேட்பாளர் நிலமணி கைது செய்யப்பட்டார்.ஏப்ரல் 23ம் நடந்த மூன்றாம் கட்ட வாக்குப்பதிவின் போதும் நிறைய குளறுபடிகள் நடந்ததாக புகார்கள் கிளம்பியுள்ளன. ஆளும் பிஜேடி கட்சியும், பாஜவும் ஒருவர் மீது ஒருவர் மா