போச்சம்பள்ளி சந்தையில் ஆடு விற்பனை ஜோர்

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சுற்றுவட்டார கிராமங்களில் திருவிழா நடைபெறுவதால் ஆடு விற்பனை ஜோராக இருந்தது.  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடப்பாண்டு மழையின்றி விவசாயம் அழியும் நிலையில் உள்ளது. ஏரி, குளங்கள் வறண்டு பாலைவனம் போல் காட்சி அளிக்கிறது. இதையடுத்து போச்சம்பள்ளியை சுற்றியுள்ள கிராமங்களில் மழை  வேண்டி பொதுமக்கள் பூஜைகள் செய்து வருகின்றனர். இதனால் சுற்று வட்டார கிராமங்களில் திருவிழா களைகட்டியுள்ளது. திருவிழாவிற்கு வரும் உறவினர்கள், நண்பர்களுக்கு கறி விருந்து வைப்பது வழக்கம்.

இதற்காக ஆடுகளை பலியிட்டு அனைவரையும் அழைத்து விருந்து வைப்பர். இதன் காரணமாக இன்று கூடிய போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ஆடு விற்பனை களைக்கட்டிளது. கடந்த வாரங்களில் ஆயிரம் ஆடுகள் மட்டுமே  விற்பனைக்கு வந்த நிலையில், இன்று கூடிய சந்தையில் சுமார் 3 ஆயிரம் ஆடுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். கடந்த வாரம் 10 கிலோ எடை கொண்ட ஆடு ₹3,500 முதல் ₹4000 வரை விற்பனையானது. இன்று 10 கிலோ கொண்ட ஆடு ₹4500 முதல் ₹5000 வரை விற்பனையானது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: