இடைத்தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளில் விடுமுறை நாளில் வேட்புமனு செய்ய முடியாது: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: இடைத்தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளில் வருகிற சனி, ஞாயிறு ஆகிய விடுமுறை நாட்களில் வேட்புமனுக்கள் பெறப்பட மாட்டாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் ஓட்டப்பிடாரம் (தனி) சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வேட்புமனுக்கள் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரியால் கடந்த 22ம் தேதி முதல் வருகிற 29ம் தேதி (திங்கள்) வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நான்காவது சனிக்கிழமை வங்கிகளுக்கு விடுமுறை நாள் ஆகும்.

ஞாயிற்றுக்கிழமை வழக்கமான அரசு விடுமுறை ஆகும். இதனால் நாளை (சனி), நாளை மறுதினம் (ஞாயிறு) ஆகிய இரண்டு நாட்கள் வேட்புமனுக்கள் பெறப்பட மாட்டாது.இவ்வாறு அதில் கூறியுள்ளார். இதனால் இன்றும், வருகிற 29ம் தேதி (திங்கள்) ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: