சென்னை எழும்பூரில் 2வது தென் மண்டல ஹாக்கிப் போட்டி நடைபெறுகிறது. நேற்று நடைப்பெற்ற லீக் போட்டி ஒன்றில் ஜிஎஸ்டி சென்னை - புனித பால் கிளப் அணியும் மோதின. அதில் ஜிஎஸ்டி சென்னை அணி 9-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றிப் பெற்றது. இன்னொரு போட்டியில் டய்ஸ் பெங்களூர் அணி 6-1 என்ற கோல் கணக்கில் லயோலா கல்லூரி அணியை வீழ்த்தியது. இன்று நடைபெறும் போட்டியில் ஐசிஎப்- அசோக் ஆக்கி அகாடமி, தெற்கு ரயில்வே - சென்னை ஹாக்கி சங்கம் அணிகள் மோத உள்ளன.