சீட்’ குடுக்கலே சுயேச்சையாயிடுவேன்: பாஜ எம்பி மிரட்டல், ‘பல்பு’ கொடுத்த தலைமை

வடமேற்கு டெல்லி மக்களவைத் தொகுதியில் போட்டியிட சீட் வழங்காவிட்டால், பாஜவை விட்டு வெளியேறி, சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவேன்’ என்று எம்பி. உதித் ராஜ் மிரட்டல் விடுத்துள்ளார்.

டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி காங்கிரஸ் கட்சி நேற்று முன்தினம் கிழக்கு டெல்லி தவிர, மீதமுள்ள 6 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. இந்நிலையில், அத்தொகுதியில் பஞ்சாபி பாடகர் ஹன்ஸ் ராஜ் ஹன்சை களமிறக்க பாஜ தலைமை ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து தற்போது வடமேற்கு டெல்லி தொகுதியின் எம்பி.யாக இருக்கும் பாஜவை சேர்ந்த உதித் ராஜ் நேற்று தனது டிவிட்டரில், `கட்சி தலைமை சீட் ஒதுக்குகிறதா? என்று பார்ப்பேன். தராவிட்டால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, சுயேச்சையாக போட்டியிடுவேன்’ என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு டெல்லியில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்துக்கு தனது ஆதரவாளர்களுடன் உதித் ராஜ் சென்றபோது, ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ் பாஜ மூத்த தலைவர்களுடன் அங்கு இருந்துள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உதித் ராஜ், பாஜ தலைவர் அமித்ஷா, பிரதமர் மோடியை சந்திக்க முயன்றேன். எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை. அமைச்சர்கள் நிதின் கட்கரி, ராஜ்நாத் சிங் போன்ற மூத்த தலைவர்கள் காத்திருக்கும்படி கூறினர்’’ என்று தெரிவித்தார்.  இதனிடையே வேட்புமனுத் தாக்கல் செய்ய நேற்றே கடைசிநாள் என்ற நிலையில், பாடகர் ஹன்ஸ் ராஜ் ஹன்சை வடமேற்கு டெல்லி மக்களவைத் தொகுதி வேட்பாளராக பாஜ நேற்று அறிவித்தது. இவர் காங்கிரசின் ராஜேஷ் லிலோதியா ஆம் ஆத்மியின் குகன் சிங் ஆகியோரை எதிர்த்து போட்டியிடுகிறார். உதித் ராஜ் கட்சி தலைமைக்கு கொடுத்த நெருக்கடியினால்தான், வடமேற்கு டெல்லி தொகுதி வேட்பாளரை அறிவிப்பதில் காலதாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: