7 போலீஸ் அதிகாரிகள் திடீர் டிரான்ஸ்பர்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 3வது கட்ட தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், 7 போலீஸ் அதிகாரிகளை திடீர் டிரான்ஸ்பர் செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.இதுகுறித்து தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், `முர்சிதாபாத் மாவட்டத்தில் 3, பஸ்சிம் பர்த்வான் மாவட்டத்தில் 2, வடக்கு 24 பர்கானா,  பன்குரா மாவட்டங்களில் தலா ஒரு அதிகாரி வீதம் மொத்தம் 7  போலீஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர் செய்யப்படுகின்றனர். மாற்றப்பட்ட அதிகாரிகளை மாநில அரசு தேர்தல் தொடர்பான எவ்வித பணியிலும் ஈடுபடுத்தக் கூடாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, முர்சிதாபாத்தில் பணியிலிருக்கும் ரகுநாத்கன்ஜ் சாய்காட் ராய், பராக்கா உதய் சங்கர் கோஷ், சாம்செர்கன்ஜ் பிதான் கல்தார் ஆகியோரும் அஜய் மண்டல், ராஜசேகர் முகர்ஜி ஆகியோரையும் தேர்தல் ஆணையம் நீக்கி  உத்தரவிட்டுள்ளது. மேலும் பிஷ்னுபூர் எஸ்டிபிஓ. சுக்மால் கண்டி தாஸ், பிஜ்பூர் ஐசி. கிருஷ்ணென்டு கோஷ் ஆகியோரையும் டிரான்ஸ்பர் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.திறமையான அதிகாரிகளை, பாஜ தூண்டுதலின்பேரில் வேண்டும் என்றே தேர்தல் ஆணையம் மாற்றி வருவதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: