சில் லி பாயின்ட்...

* பாங்காக்கில் நடக்கும் ஆசிய பாக்சிங் தொடரின் ஆண்கள் 56 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் கவிந்தர் சிங் பிஷ்ட், உலக சாம்பியன் கைரத் யெரலியேவை (கஜகஸ்தான்) வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார். 52 கிலோ எடை பிரிவில் அமித் பாங்கல், ஒலிம்பிக் சாம்பியன் ஹசன்பாய் துஸ்மதோவை (உஸ்பெகிஸ்தான்) வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.

Advertising
Advertising

* தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் (ஆஸி.), ஜானி பேர்ஸ்டோ (இங்கிலாந்து) இருவரும் உலக கோப்பை பயிற்சி முகாமில் பங்கேற்பதற்காக விரைவில் நாடு திரும்ப உள்ளது ஐதராபாத் அணிக்கு மிகப் பெரிய இழப்பாக இருக்கும் என்று அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் கூறியுள்ளார்.

* ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி விவரம்: குல்பாதின் நயீப் (கேப்டன்), முகமது ஷஷாத் (விக்கெட் கீப்பர்), நூர் அலி ஸத்ரன், ஹஸ்ரதுல்லா ஸஸாய், ரகமத் ஷா, அஸ்கர் ஆப்கன், ஹஸ்மதுல்லா ஷாகிதி, நஜிபுல்லா ஸத்ரன், சமியுல்லா ஷின்வாரி, முகமது நபி, ரஷித் கான், தவ்லத் ஸத்ரன், அப்தாப் ஆலம், ஹமித் ஹசன், முஜீப் உர் ரகுமான்.

* லா லிகா கால்பந்து தொடரின் லீக் ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணி 3-0 என்ற கோல் கணக்கில் அத்லெடிக் பில்போ அணியை அபாரமாக வென்றது. ரியல் மாட்ரிட் வீரர் கரும் பென்சிமா ஹாட்ரிக் கோல் போட்டு அசத்தினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: