4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு டிடிவி தினகரன் மே 1 முதல் 16 வரை பிரசாரம்

சென்னை: நான்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வரும் மே 1ம் தேதி முதல் 16ம் தேதி வரை பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.  இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட  அறிக்கை: ஆட்சி, அதிகாரம், சூழ்ச்சி என துரோகிகள் ஏந்தி வந்த அத்தனை ஆயுதங்களையும் களத்தில் துணிவோடு எதிர்கொண்ட நம்முடைய புதிய இயக்கத்தை மக்கள் வரவேற்றிருக்கிறார்கள். மே 23ம் தேதி பெறப்போகும் அந்த  வரலாற்று வெற்றியை முழுமையடைய செய்ய ஜனநாயகத்தின் அடுத்த போர்க்களம் தயாராகிவிட்டது.

Advertising
Advertising

திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி மற்றும் சூலூர் ஆகிய நான்கு சட்டப்பேரவை தொகுதிகளிலும் மே 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, மே 1ம் தேதி முதல் 16ம் தேதி வரை பிரச்சார  சுற்றுப்பயணம் நடைபெற உள்ளது. அதன்படி, மே 1,2,9,16ம் தேதிகளில் திருப்பரங்குன்றம், 3,4,10,14ம் தேதிகளில் அரவக்குறிச்சி, 5,6,11,15ம் தேதிகளில் ஓட்டப்பிடாரம், 7,8,12,13ம் தேதிகளில் சூலூரிலும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட  உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: