ஆர்சிபி அணியில் கோஹ்லி சதம் நைட் ரைடர்சுக்கு 214 ரன் இலக்கு : சரவெடியாய் வெடித்த மொயின் அலி

கொல்கத்தா:   ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 214 ரன் இலக்கை பெங்களூரு  அணி  நிர்ணயித்தது. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய 35வது லீக் போட்டி நேற்று இரவு ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் நைட்  ரைடர்ஸ் அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் டாஸ் வென்று பந்துவீச முடிவு செய்தார். 7 தொடர் தோல்விகளால் துவண்டு இருந்த ஆர்சிபி அணி, கடந்த போட்டியில் பஞ்சாப் அணியை வென்று முதல் வெற்றியை பதிவு செய்த தெம்புடன்  களம் இறங்கியது. துவக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் விராத் கோஹ்லி, பார்திவ் படேல் களமிறங்கினர். அணியின் ஸ்கோர் 18 ஆக இருந்தபோது பார்திவ் படேல் நிதிஷ் ராணாவிடம் கேட்ச்  ஆனார். அவரது விக்கெட்டை நரைன் கைப்பற்றினார். அடுத்து வந்த அக்‌ஷ்யதீப் நாத்(13ரன்), ரஸ்ஸல் பந்தில் உத்தப்பாவிடம் கேட்ச் கொடுத்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய மொயின் அலி, வந்த வேகத்தில் இரண்டு சிக்சர்களை பறக்கவிட்டார்.

Advertising
Advertising

தொடர்ந்து மட்டையை சுழற்றிய அவர், குல்தீப் யாதவ் வீசிய  16வது  ஓவரில் 4,6,4,6,வைட்,6 என சிக்சரும், பவுண்டரியுமாக பறக்கவிட்டார். ஆனால், அதே ஓவரின் கடைசி பந்தில் பிரஷித்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். மொயின் அலி 28  பந்துகளை மட்டுமே சந்தித்து 66 ரன் எடுத்தார்.  அவரை தொடர்ந்து மார்கஸ் ஸ்டிரோனிக்ஸ்,  கோஹ்லியுடன் இணைந்தார். மொயின் அலிக்கு பின் கோஹ்லி அடித்து ஆட ரன்  வேகமாக உயர்ந்தது. இதனால் அணியின் ஸ்கோர் சற்று வேகமெடுத்தது. 40 பந்துகளில் அரை சதம் அடித்த கோஹ்லி, அதே வேகத்தை தொடர்ந்தார். இதனால்  கடைசி ஓவரின் 5வது பந்தில்  பவுண்டரி அடித்து ஐபிஎல் போட்டியில் தனது 5வது சதத்தை பூர்த்தி செய்தார். இதற்காக 58 பந்துகளை கோஹ்லி எதிர்கொண்டார். ஆனால், அடுத்த பந்தில் குர்னே பந்தில்  சுப்மான் கில்லிடம் கேட் கொடுத்தார். 20 ஓவர் முடிவில் ஆர்சிபி அணி 3 விக்கெட் இழப்பிற்கு 213 ரன் எடுத்தது. அடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி துரத்தலை தொடங்கியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: