திரிபுரா கிழக்கு மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ஏப்ரல் 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு

அகர்தலா : திரிபுரா கிழக்கு மக்களவைத் தொகுதிக்கான தேர்தலை ஏப்ரல் 23ம் தேதிக்கு தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது.

நாளை 2ம் கட்ட தேர்தல்

தமிழகம் உட்பட 13 மாநிலங்களில் உள்ள 97 மக்களவை தொகுதிகளில் நாளை 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் அஸ்ஸாம் (5) , சத்தீஸ்கர் (3) , பீகார் (5) , ஜம்மு & காஷ்மீர் (2) , கர்நாடகா (14) , மகாராஷ்டிரா (10) , மணிப்பூர் (1) , ஒடிசா (5) , தமிழ்நாடு (39) , புதுச்சேரி (1) , திரிபுரா (1) , உத்தரப்பிரதேசம் (8) , மேற்கு வங்காளம் (3) ஆகிய 13 மாநிலங்களில் 97 மக்களவை தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.

திரிபுரா கிழக்கு மக்களவைத் தொகுதி தேர்தல் ஒத்திவைப்பு

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இதனிடையே திரிபுரா கிழக்கு மக்களவைத் தொகுதிக்கான தேர்தலை ஏப்ரல் 23ம் தேதிக்கு தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது. திரிபுராவில் தற்போது நிலவும் சட்டம் ஒழுங்கு சூழல் நியாயமான முறையில் தேர்தல் நடத்துவதற்கு ஏதுவாக இல்லை என மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரியும் சிறப்பு காவல் கண்காணிப்பாளரும் தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்திருந்தனர்.இதையடுத்து நாளை நடக்கவிருந்த திரிபுரா மக்களவைத் தொகுதி தேர்தலை வரும் 23ம் தேதிக்கு தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது.  

தேர்தல் ஆணையத்தில் சிபிஎம் புகார்

இதனிடையே கடந்த ஏப்ரல் 11ம் தேதி திரிபுரா மாநிலம் மேற்கு திரிபுரா மக்களவைத் தொகுதியில் முதற்கட்ட தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கவும் 464 வாக்குப்பதிவு மையங்களில் மறு வாக்குப்பதிவு நடத்தவும் கோரி தேர்தல் ஆணையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.  

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: