பூந்தமல்லி பேரவை தொகுதி: என்னதான் செய்வீங்க

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்: திமுக வேட்பாளர் ஆ.கிருஷ்ணசாமி

பூந்தமல்லியில் அரசு கலைக் கல்லூரி கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். மெட்ரோ ரயில் திட்டத்தை பூந்தமல்லி வரை இணைக்க முயற்சி மேற்கொள்ளப்படும். மினி பஸ் போக்குவரத்து மூலம் அனைத்து கிராமப் பகுதிகளும் இணைக்கப்படும். பூந்தமல்லி பைபாஸ் சாலை பாரிவாக்கம் சந்திப்பு, நசரத்பேட்டை, திருமழிசை ஆகிய இடங்களில் மேம்பாலம் அமைக்கப்படும். பின்தங்கிய கிராமங்களில் அனைத்து வசதிகளுடன் கூடிய சுகாதார மையங்களும், நவீன சமுதாயக் கூடங்களும் அமைக்கப்படும்.

ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வாரி தண்ணீர் சேமிக்கப்படும். இதன்மூலம் விவசாயம் பாதுகாக்கப்படும். நீண்ட நாள் கோரிக்கையான தாமரைப்பாக்கம் கூட்டு சாலையில் நவீன வசதிகளுடன் பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தொழிற்பயிற்சி மையங்கள் ஏற்படுத்தி நிறைய மாணவர்கள் தொழிற்கல்வி கற்பதற்கு வழிவகை செய்யப்படும்.

மேலும் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தி அதன் மூலம் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்குவேன். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படவும், மாநிலத்தில் உள்ள எடப்பாடி ஆட்சி ஒழிய வேண்டும், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி மலர வேண்டும் என்பதை மையப்படுத்தி பிரசாரம் இருக்கிறது.

25 ஆயிரம் மரங்கள் நடுவோம்: அதிமுக வேட்பாளர் க.வைத்திநாதன்

பூந்தமல்லி நகராட்சி காட்டுப்பாக்கம், சென்னீர்குப்பம் உள்ளிட்ட பகுதிகளை இணைத்து ஒருங்கிணைந்த பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்ற வேண்டும். அரசு கலைக் கல்லூரி கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். பூந்தமல்லி ஏரியை சீரமைத்து பூங்கா அமைக்கப்படும். பசுமை வளம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தொகுதி முழுவதும் ஆண்டுக்கு 25 ஆயிரம் மரங்கள் நடப்படும். காக்களூர், திருமழிசை, சிப்காட் தொழிற்பேட்டைகள் மேம்படுத்தப்படும்.

வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தி அதன் மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். நான் அடிப்படையில் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் என்பதால், விவசாயிகளுக்கு அரசின் மூலம் கிடைக்கும் இடுபொருள்கள், மானியங்கள் கிடைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்படும் இடங்களில் துப்புரவு வளாகங்கள் அமைக்கப்படும்.

குமணன்சாவடி, பாரிவாக்கம் பைபாஸ் சாலை சந்திப்பு, நசரத்பேட்டை ஆகிய இடங்களில் மேம்பாலம் கட்டப்படும். கிராமங்களுக்கு போக்குவரத்து வசதிகள் முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். அதிக மக்கள் வசிக்கும் கிராமங்களில் சுத்தமான ஆர்.ஓ. வாட்டர் அமைத்து கொடுக்கப்படும். மேலும் தொகுதியில் உள்ள அனைத்து பகுதிகளுக்கு அடிப்படை வசதிகள் முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: