வட சென்னையில் வாகை சூடப்போவது யார்? சட்டசபை தொகுதிகள் திருவொற்றியூர், ஆர்.கே.நகர், பெரம்பூர், கொளத்தூர், திரு.வி.க.நகர், ராயபுரம்

சென்னையின் மிக பழமையான பகுதிகள் அடங்கியது வட சென்னை தொகுதி. இந்தியாவின் பழமையான ரயில் நிலையம் மற்றும் தென் இந்தியாவின் முதல் ரயில் நிலையம் என்ற பெருமையை பெற்ற ராயபுரம் ரயில் நிலையம் இந்த தொகுதியில்தான் அமைந்துள்ளது. இந்தியாவின் முதல் பொதுத்துறை துறைமுகமான எண்ணூர் துறைமுகமும் இந்த தொகுதியில்தான் உள்ளது. வட சென்னை தொகுதியிலிருந்து திமுகவின் மூத்த தலைவர்களான நாஞ்சில் கி.மனோகரன், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். வட சென்னை தொகுதியில் இதுவரை நடைபெற்றுள்ள 15 நாடாளுமன்ற தேர்தல்களில் திமுக 10 முறையும், காங்கிரஸ் 3 முறையும், அதிமுக ஒரு முறையும், சுயேட்சை ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளனர்.

2014ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவின் வெங்கடேஷ் பாபு 4,06,704 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுகவின் கிரிராஜன் 3,07,000 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். முழுமையான அடிப்படை வசதிகள் இன்று வரை செய்யப்படாமல் இருப்பதுதான் வட சென்னையின் முக்கிய பிரச்சனையாகும்.  இந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் கலாநிதி வீராசாமி, அதிமுக கூட்டணி சார்பில் தேமுதிகவைச் சேர்ந்த அழகாபுரம் மோகன் ராஜ், அமமுக சார்பில் சந்தான கிருஷ்ணன் உள்ளிட்ட 23 வேட்பாளர்கள் உள்ளனர். தேமுதிக வேட்பாளர் சேலத்தை சேர்ந்த அழகாபுரம் மோகன் ராஜ் நிறுத்தப்பட்டுள்ளார். தொகுதிக்கு தொடர்பு இல்லாத காரணத்தாலும், அதிமுக மற்றும் கூட்டணிகள் ஒத்துழைப்பு தராத காரணத்தாலும் அவரால் முழுமையாக பிரசாரத்தில் ஈடுபட முடியவில்லை என்று கூறப்படுகிறது.

2014 ம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தலில் திருவொற்றியூர், கொளத்தூர், திரு.விக.நகர் ஆகிய மூன்று தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றார். ஆர்.கே.நகர், பெரம்பூர், ராயபுரம் ஆகிய மூன்று தொகுதிகள் அதிமுக வெற்றி பெற்றது. ஜெயலலிதா மறைவுக்கு பின் நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற பின்பு தொகுதிக்கு எதுவும் செய்யாத காரணத்தால் ஆர்.கே.நகர் பொதுமக்கள் தினகரன் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.  திமுகவின் பலம், தேதிமுவை கைவிட்ட அதிமுக, தினகரன் மீதான அதிருப்தி ஆகியவற்றை எல்லாம் வைத்து பார்த்தால் வட சென்னை தொகுதியில் திமுகவின் கையே ஓங்கி இருக்கிறது.

வாக்காளர்கள்

ஆண்        7,28,679

பெண்        7,58,326

இதர பிரிவினர்    456

மொத்தம்        14,87,461

இதுவரை வெற்றி பெற்றவர்கள்

1957    அந்தோனி பிள்ளை (சுயேட்சை)

1962    சீனிவாசன் (காங்கிரஸ் )

1967    நாஞ்சில் கி.மனோகரன் (திமுக )

1971    நாஞ்சில் கி.மனோகரன் (திமுக)

1977    ஆசைத் தம்பி (திமுக )

1980    லட்சுமணன் ( திமுக )

1984    என்.வி.என். சோமு (திமுக)

1989    தா. பாண்டியன் (காங்கிரஸ் )

1991    தா.பாண்டியன் (காங்கிரஸ் )

1998    செ.குப்புசாமி (திமுக)

1999    செ.குப்புசாமி ( திமுக)

2004    செ.குப்புசாமி (திமுக)

2009    டி.கே.எஸ். இளங்கோவன் (திமுக)

2014    வெங்கடேஷ் பாபு (அதிமுக)

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: