திமுக கூட்டணிக்கு கிறிஸ்தவ போதகர்கள் கூட்டமைப்பு ஆதரவு

சென்னையில் திருச்சபை போதகர்களைக் கொண்ட ‘‘ஜனநாயகத்திற்கான சென்னை குடிமக்கள்’’ என்ற அமைப்பின் கூட்டம் கடந்த 8ம் தேதி கூடியது. இக்கூட்டத்தில் இந்த அமைப்பின் தலைவர் ஜான் ஜெயகரன் தலைமையில், 175க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ ஆயர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், தமிழக அரசியல் நிலவரம் மற்றும் நாடு முழுவதும் கிறிஸ்தவர்கள் எதிர்கொண்டு வரும் பிரச்னைகள் குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தப்பட்டன.

அப்போது, ஒருமித்த கருத்தாக ஜனநாயகம், மதச்சார்பின்மை, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தை ஆதரிக்கின்ற திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, இந்திய ஜனநாயக கட்சி மற்றும் இவர்களின் ஆதரவு கட்சிகள், அமைப்புகள் சேர்ந்து ஏற்படுத்தியுள்ள மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களிப்பது என்று ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது. இந்த முடிவை அனைத்து கிறிஸ்தவ அமைப்புகளுக்கும், சர்ச்சுகளுக்கும் தெரிவிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: