பிரதமர் மோடிக்கு ரஷ்யா உயர் விருது

புதுடெல்லி: இந்தியா - ரஷ்யா நீண்ட கால நண்பர்கள். பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு இந்த உறவு மேலும் வலுபடுத்தப்பட்டது. இந்நிலையில், இருநாட்டு உறவுக்காக சிறப்பான சேவையாற்றிய மோடியை பாராட்டி, தனது நாட்டின் மிகப்பெரிய உயரிய விருதை வழங்குவதாக ரஷ்யா நேற்று அறிவித்தது. ‘ஆர்டர் ஆப் செயின்ட் ஆன்ட்ரூ தி அபோஸ்தல்’ என்ற இந்த உயரிய விருது, ரஷ்யாவின் பெருமைக்குரியது. இந்த விருது தனக்கு வழங்கப்பட்டதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு மோடி நன்றி தெரிவித்துள்ளார். இருநாட்டுக்கு மேலும் வலுப்பெறும் என்றும் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: