ரஃபேல் விமானங்களில் பாகிஸ்தான் விமானிகளுக்கு பயிற்சி அளிக்கவில்லை : பிரான்ஸ் தூதர் விளக்கம்

டெல்லி : ரஃபேல் போர் விமானத்தில் பாகிஸ்தான் விமானிகளுக்கு பயிற்சி தரப்படுவதாக செய்தி வெளியான நிலையில், அதற்கு பிரான்ஸ் தூதர் அலெக்சாண்டர் மறுப்பு தெரிவித்துள்ளார். 2017ம் ஆண்டு கத்தாரின் விமானப்படை விமானிகள் பாகிஸ்தானுக்கு வந்து முதல் பேட்ச் பாகிஸ்தான் போர் விமானிகளுக்கு ரஃபேல் விமானங்களை இயக்க பயிற்சி கொடுத்ததாக தகவல் வெளியானது. இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது ஒரு பொய் செய்தி என தன்னால் நிரூபிக்க முடியும் என பிரான்ஸ் தூதர் அலெக்ஸாண்டர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தை தலைமையகமாகக் கொண்ட பாகிஸ்தான் விமானப்படையிடம், அண்டை நாடான கத்தாரில் 30க்கும் மேற்பட்ட பிரான்ஸில் இருந்து வாங்கப்பட்ட அதிநவீன ரஃபேல் விமானங்கள் உள்ளன. கடந்த 2017ம் ஆண்டு கத்தாரின் விமானப்படை விமானிகள் பாகிஸ்தானுக்கு வந்து முதல் பேட்ச் பாகிஸ்தான் போர் விமானிகளுக்கு ரஃபேல் விமானங்களை இயக்கப் பயிற்சி கொடுத்ததாக செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள பிரான்ஸ் தூதர் அலெக்சாண்டர், கடந்த 2015 ஆண்டு கத்தார் 24 ரபேல் விமானங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்ததாகவும், 2017 ஆண்டு மேலும் 12 போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்ததாகவும் தெரிவித்தார்.

அதில் முதற்கட்டமாக கடந்த பிப்ரவரி மாதம் விமானங்கள் ஒப்படைக்கப்பட்டு விட்டதாக கூறியுள்ள அவர், பாகிஸ்தான் விமானப்படை விமானிகளுக்கு பயிற்சி அளிக்கப்படவில்லை என்றும் தகவல் அளித்துள்ளார். மேலும் பிரான்ஸ், இந்தியாவுடனான நல்லுறவையே விரும்புவதாகவும், இந்தியாவுக்கு எதிராக போர் புரிய பிரான்ஸ் நிறுவனம் விமானம் தயாரித்து கொடுத்தால் இந்தியாவின் கோபத்துக்கு ஆளாக வேண்டி இருக்கும் என பிரான்ஸ் தூதர் விளக்கம் அளித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: