ஆந்திராவில் தெலுங்குதேசம் எம்பி வீட்டில் ஐ.டி.ரெய்டு : வருமான வரிசோதனையை கண்டித்து எம்.பி. தர்ணா

ஹைதராபாத் : ஆந்திராவில் நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தெலுங்குதேசம் எம்பியின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்றிரவு முதல் அதிரடி சோதனை நடத்தி உள்ளனர். குண்டூர் நாடாளுமன்றத் தொகுதியில் தெலுங்குதேசம் சார்பில் மீண்டும் போட்டியிடும் கல்லா ஜெயதேவ்வின் வீடு மற்றும் அலுவலகங்களில் ஒரே நேரத்தில் வருமான வரி சோதனை நடைபெற்றது.

பல மணி நேர சோதனையின் முடிவில் எம்பியின் உதவியாளர் ஒருவரையும் வருமான வரித்துறையினர் அழைத்து சென்றுள்ளனர். இதனைக் கண்டித்து கல்லா ஜெயதேவ் தமது ஆதரவாளர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். ஆந்திராவில் உள்ள மக்களவைத் தொகுதிகளுக்கும் சட்டப் பேரவைக்கும் நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த வருமான பரிசோதனை சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. வருமான வரி சோதனையின் மூலம் எதிர்கட்சிகளை ஒடுக்க மத்திய அரசு முயற்சிப்பதாக தெலுங்கு தேசம் சாட்டியுள்ளது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கல்லா ஜெயதேவ், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள போது தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்காமல் இத்தகைய சோதனை நடத்துவது சட்டவிரோதமானது; எதிர்கட்சிகளை குறிவைத்து வருமான வரிசோதனை நடைபெற்று வருகிறது; என்னுடைய உதவியாளர் ஒருவரை விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர்; தெலுங்குதேசம் கட்சியினரிடம் மட்டும் சோதனை நடத்தப்படுவது அரசியல் உள்நோக்கமுடையது,என்று கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: