தொண்டரை வாயில் அடித்ததால் கோபம் எடப்பாடி ‘செம்ம’ டென்சன் அடக்கி வாசிக்கும் செம்மலை

தொண்டரை வாயில் அடித்த விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி டென்சன் ஆகியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால் எம்எல்ஏ செம்மலை கட்சிக்கூட்டங்களில் அமைதியாக இருப்பதாக கூறப்படுகிறது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, தர்மபுரி தொகுதியில் போட்டியிடுகிறார். இதையொட்டி அவர் மேச்சேரி பகுதியில் வாக்கு சேகரிக்க சென்றார். அவரும் அதிமுக எம்எல்ஏ செம்மலை, ஜி.கே.மணி ஆகியோர் சென்றிருந்தனர். இதில் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.அப்போது அதிமுகவை சேர்ந்த தொண்டர் ஒருவர் அன்புமணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

கடந்தமுறை வெற்றி பெற்றீர்கள், 5 ஆண்டுகளாக எங்கே போனீர்கள் என்பது உள்ளிட்ட கேள்விகளை கேட்டு தனது கருத்தை வெளிப்படுத்தினார். இதை அருகில் இருந்து செம்மலை பார்த்து கோபமடைந்தார். ஒருகட்டத்தில் கேள்வி கேட்டவரின் வாயிலேயே அடித்தார். இந்தசம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் செம்மலை தாக்கியது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி நகைச்சுவையை ஏற்படுத்தியது. மேலும் சரியான கேள்வி கேட்டவரை தாக்கியதால் விமர்சனமும் எழுந்தது. இந்நிலையில் இந்த விவகாரத்தினால் முதல்வர் எடப்பாடி கோபமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இதுகுறித்து அதிமுக வட்டாரத்தில் பேசப்படுவதாவது:

ஏற்கனவே வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலஜி ஆகியோர் சர்ச்சைக்குறிய வகையில் பேசி வருகின்றனர். அதேபோல் அன்புமணியும், ராமதாஸ் ஆகியோர் அதிமுக கூட்டணியில் இணைவதற்கு முன்பு இபிஎஸ், ஓபிஎஸ்சை கடுமையாக விமர்சனம் செய்தனர். தற்போது கூட்டணியில் இணைந்துள்ளனர். இதையடுத்து சமூகவலைதளங்களில் இச்சம்பவம் மீம்ஸ் ஆக வெளியாகி நகைச்சுவையை ஏற்படுத்தி வருகிறது.

அப்படியிருக்கும் சூழ்நிலையில் கட்சிக்கூட்டத்தில் தொண்டர் தாக்கப்பட்ட விவகாரமும் சமூகவலைதளங்களில் பரவியது. இதுவும் கேலி, கிண்டலை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரம் முதல்வருக்கு சென்றதையடுத்து, அவர் கோபமடைந்துள்ளார். எடப்பாடி கோபமடைந்தது மற்றும் சமூகவலைதளங்களில் சம்மந்தப்பட்ட வீடியோ வெளியாகி விமர்சனம் செய்யப்பட்டு வருவது செம்மலைக்கும் அப்செட்டை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் அவர் தற்போது அமைதியாக காணப்படுகிறார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: