ரபேல் விவகாரம் நாட்டின் பாதுகாப்புடன் மோடி அரசு விளையாடுகிறது: சீதாராம் யெச்சூரி சாடல்

புதுடெல்லி: ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் நாட்டின் பாதுகாப்புடன் மோடி அரசு விளையாடுவதாக மார்க்சிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கடுமையாக சாடியுள்ளார். டெல்லியில் மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி நேற்று கூறியதாவது: இந்திய விமானப்படைக்கு தேவைக்கும் குறைவான ரபேல் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில், தனது தொழிலதிபர் நண்பர் ஆதாய மடையும் நோக்கில், முன் அனுபவமற்ற அவரது நிறுவனத்துக்கு ஒப்பந்தம் ஒதுக்கப்பட்டது.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் விதிமுறைகளை மீறி, பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கும் டசால்ட், ஏவுகணை உற்பத்திய செய்யும் ஐரோப்பிய நிறுவனமான எம்பிடிஏ என்ற இரண்டு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது. இதில் இருந்து மோடி தலைமையிலான அரசின் உண்மை முகம் தெரிய வருகிறது. இதன் மூலம், நாட்டின் பாதுகாப்பில் மத்திய அரசு விளையாடி வருவதும் தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: