வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டியபோது 1000 ஆண்டு பழமையான யோக ஆஞ்சநேயர் சிலை கண்டெடுப்பு

ராணிப்பேட்டை:  வீடுகட்ட அஸ்திவாரம்  தோண்டிய போது 1000 ஆண்டு பழமையான யோக ஆஞ்சநேயர் சிலை கண்டெடுக்கப்பட்டது. வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை மிஸ்ரி நகரில் வசிக்கும் ஒருவர் வீடு கட்டும்பணி செய்து வருகிறார். இதற்காக நேற்று முன்தினம் மாலை அஸ்திவாரம் தோண்டும் பணி நடந்தது. அப்போது, பள்ளத்தில் ஒரு கற்சிலை இருந்தது. அதை முழுமையாக வெளியே எடுத்து பார்த்தபோது 2 அடி உயரத்தில் உள்ள யோக அனுமன் சிலை எனவும், இது சுமார் 1000 ஆண்டு பழமையான சோழற்காலத்தை சேர்ந்தது எனவும் தெரியவந்தது.

இதையடுத்து, சிலைக்கு மஹா ப்ரத்தியங்கிராதேவி கோயில் மணி சுவாமி பாலாபிஷேகம் செய்து பூஜை நடத்தினார். இதையறிந்த அப்பகுதி மக்கள் ஏராளமானோர் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர், அந்த சிலை ராணிப்பேட்டை தனி தாசில்தார் ரூபிபாயிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் வேலூர் தொல்லியியல் துறையிடம் ஒப்படைத்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: