ஆளுங்கட்சிக்கு தேர்தல் ஆணையம் ‘ஜால்ரா’அரசு ஊழியர், ஆசிரியர்களின் தபால் ஓட்டுகளை செல்லாத ஓட்டாக மாற்ற சதி: முன்னாள் சட்டமேலவை ஆசிரியர் தொகுதி உறுப்பினர் க.மீனாட்சி சுந்தரம் பகிரங்க குற்றச்சாட்டு

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது ஆளுங்கட்சிக்கு என்ன தான் கோபம்?. தபால் ஓட்டு போடக்கூடிய அரசு ஊழியர்கள் எல்லாம் போராட்டத்தில் இருந்தார்கள். அவர்கள் எல்லாம் அரசுக்கு எதிராக இருப்பார்கள் என்று கருதி அவர்களின் தபால் ஓட்டுகளை போடாமல் பண்ணனும் என்று  மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டு அதை செய்து வருகின்றனர். தேர்தல் ஆணையமும் மத்திய, மாநில அரசுகளின் சொல்லை கேட்டு அதற்கு தகுந்தாற் போல் நடந்து கொண்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டு பரவலாக பேசப்படுகிறது. அதனால் தேர்தல் ஆணையத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இரண்டாவது தேர்தல் பயிற்சி வகுப்பில் தபால் வாக்கை தருவதாக சொன்னார்கள். ஆனால் தரவில்லை. 13ம் தேதி நடைபெறும் கடைசி பயிற்சி வகுப்பில் தருவதாக கூறுகிறார்கள். தபால் வாக்கை தருவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை.

தபால் வாக்கை தருவதற்கு தாமதப்படுத்தினால், அது நேரம் தவறி போகும். அதனை செல்லாத வாக்கில் சேர்த்து விடலாம் என்ற திட்டமும் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. தபால் ஓட்டு போடுவதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறதே? தபால் ஓட்டை பொறுத்தவரை, தபால் ஓட்டும் போடக்கூடாது. தபால் ஓட்டு உள்ளவர்களின் குடும்பத்தினரும் ஓட்டு போடக்கூடாது. இதற்கு என்ன செய்யலாம் என்பதை எல்லாம் அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். திட்டமிட்டு செய்து கொண்டிருக்கிறார்கள். ஆசிரியர், அரசு ஊழியர்கள், பென்சனர் என்று 18 லட்சம் பேர் இருக்கிறோம். இந்த 18 லட்சம் பேருக்கும் ஓட்டும் உண்டு, அவர்கள் குடும்பத்தினருக்கும் ஓட்டு உண்டு. “இச் ஒன் டேக் டென்” என்ற கோஷத்தை நாங்கள் வைத்துள்ளோம். திமுகவின் தேர்தல் அறிக்கையில் மு.க.ஸ்டாலின் எங்களுடைய கோரிக்கையான “புதிய ஓய்வூதியம் ரத்து செய்யப்படும். பழைய ஓய்வூதியம் திட்டம் அமல்படுத்தப்படும். தற்காலிகமாக பணியாற்றும் ஆசிரியர்கள் நிரந்தரப்படுத்தப்படுவர்.

ஊதிய முரண்பாடுகளை களைவேன்” என்று எங்களுடைய கோரிக்கைகளை எல்லாம் ஏற்று அறிவிப்பு தந்துள்ளார். அரசு தரப்பில் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்றால் போராட்டத்தில் ஈடுபட்ட, அறவழியில் போராடிய எங்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். பணியிடை நீக்கம், பணியிட மாற்றம், தகுதியை குறைத்து கீழ்நிலையில் பணியாற்ற சொல்வது. ‘’17பி’’, ‘’7இ’’ என்ற குற்றப்பத்திரிகையை கொடுத்து பணிநீக்குவதற்கு முயற்சி செய்து ெகாண்டிருப்பது, அடக்குமுறையை விரித்து விட்டு தேர்தலை அவர்கள் சந்திக்கிறார்கள். எந்த துணிவோடு சந்திக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆசிரியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக்கூடாது என்று அதிமுக தரப்பில் தமிழக தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதே?

அதிமுகவின் புகாரை தேர்தல் ஆணையம் ஏற்காதது போல் நடித்து கொண்டு, இன்றைய தினம் நாங்கள் தபால் ஓட்டு போடாமல் இருப்பதற்கு வழிவகை செய்து கொண்டிருக்கிறது. தேர்தல் வாக்குசாவடிகளில் தலைமை பணியில் யாரை போட வேண்டும். அதிக சம்பளமும், பெரிய பொறுப்பில் இருப்பவர்களை தான் போட வேண்டும். கல்லூரி பேராசிரியரை போல் ‘’மை’’ வைக்கும் பொறுப்பில் போட்டுள்ளனர். 3வது இடத்துக்கு தள்ளியிருக்கிறார்கள். கல்லூரி பேராசிரியரை விட குறைந்த கல்வி தகுதியும், குறைவான சம்பளம் வாங்குபவர்களை முதல் இடத்தில் அதாவது வாக்குசாவடி பொறுப்பாளராக  போட்டுள்ளார்கள். அவர்களை அவமானப்படுத்துகிறார்கள். ஆளுங்கட்சிக்கு சாதகமாக தான் தேர்தல் ஆணையம் பணியாற்றுகிறது என்பது இதன் மூலம் தெரியவருகிறது.

ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு ஆசை வார்த்தை காட்டப்படுவதாக கூறப்படுகிறதே? அதிமுகவில் செல்வாக்கு உள்ளவர்கள் ஆங்காங்கே ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை சந்தித்து வாக்குகளை எங்களிடம் நிரப்பி கொடுங்கள் என்று கூறுகிறார்கள். நாங்கள் அதை மறுக்கிறோம். கேட்ட இடத்திற்கு இடம் மாறுதல், பதவி உயர்வு உள்ளிட்ட ஆசை வார்த்தை கூறுவதாகவும் தெரிய வருகிறது. நாங்கள் அதுக்கு எல்லாம் ஈடாக மாட்டோம். அவங்க என்ன ஆசை வார்த்தை கூறினாலும் ஈடாக மாட்டோம். முதலமைச்சராகவே உட்கார வைக்க போகிறோம் என்று சொன்னால் கூட ஈடாக மாட்டோம்.  இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: