வளர்ச்சி திட்டங்கள் தொடர ஆதரவு தாருங்கள்:தென் சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் கோரிக்கை

சென்னை: தென் சென்னை தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் சைதாப்பேட்டை பகுதியில் வீதி வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு கேட்டார்.  அப்போது  அவர் பேசியதாவது: எனது தீவிர முயற்சியின் காரணமாக சைதாப்பேட்டை தொகுதியில் முதியோர்களுக்கான பிரத்யேக சிகிச்சை மையம் 110 கோடியில் கட்டப்படுகிறது. இது விரைவில் திறக்கப்படும். ரயில் நிலையங்களில் நடை மேம்பாலங்கள் அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன. பெண்கள் பாதுகாப்புக்காக சைதாப்பேட்டை தொகுதியில் மட்டும் 50 லட்சம் நிதியில் சிசிடிவி கேமராக்கள் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளேன். இதுபோன்ற வளர்ச்சித் திட்டங்களை நமது தொகுதியில் தொடர்ந்து நிறைவேற்றப்பட எனக்கு மீண்டும் வாய்ப்பு அளித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஜெயவர்தன் பேசினார்.

பின்னர், சைதாப்பேட்டை, தாடண்டர் நகர் அருகில் 142, 171 ஆகிய வட்டங்களில்  தேர்தல் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். வேட்பாளருடன் மாவட்ட செயலாளர் வி.என்.ரவி, எம்.எம்.பாபு, கடும்பாடி, பகுதி செயலாளர் என்.எஸ்.மோகன் மற்றும் பழனி, பாலசுப்ரமணி, 171 வட்ட செயலாளர்கள் போர் ரவி, வசந்தகுமார், 142 வட்ட செயலாளர்கள் சந்தோஷ், ஏ.பாஸ்கர், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பா.ம.க வடிவேல், தே.மு.தி.க வி.சி.ஆனந்தன், பா.ஜ.க. டால்பின் ஸ்ரீதர், த.மா.காமனோகர், ச.ம.க.பாலகிருஷ்ணன், புதிய நீதி கட்சி எஸ்.என்.ரமேஷ், புரட்சி பாரதம் ராஜி, அதிமுக மற்றும் கூட்டணி  கட்சிகளின்  நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக சென்று பொது மக்களிடம் வாக்குகளை சேகரித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: