தேர்தல் நடத்தை விதிமீறல் பொது இடத்தில் போஸ்டர் ஒட்டிய பிஎஸ்பி வேட்பாளர் மீது வழக்கு: தேர்தல் ஆணையம் அதிரடி

நொய்டா: தேர்தல் நடத்தை விதி மீறலில் ஈடுபட்டதாக, கவுதம் புத்தா நகர் தொகுதி பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் மீது தேர்தல் ஆணையம் வழக்கு பதிவு செய்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் கவுதம் புத்தா நகர் மாவட்டத்தின் எம்.பி தொகுதியில் நொய்டா, ஜேவர், சிக்கந்தராபாத், தாத்ரி மற்றும் புலந்த்ஷர் மாவட்டத்தின் குர்ஜா பகுதிகள் உள்ளன. காங்கிரஸ் சார்பில் அர்விந்த குமார், பாஜ தரப்பில் மகேஷ் சர்மா, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சிகள் கூட்டணியில் பகுஜன் சமாஜ் வேட்பாளர் சத்வீர் நாகர்(37), ஆம் ஆத்மிக்காக ஸ்வேதா சர்மா உட்பட 21 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதில் 8 மனுக்கள் நிராகரிப்புக்கு உள்ளானது. 13 பேர் களத்தில் உள்ளனர். நிராகரிப்பு செய்யப்பட்ட மனுக்களில் ஒரே பெண் வேட்பாளரான ஸ்வேதாவின் மனுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஆம் ஆத்மி களத்தில் இல்லை.

வேட்பாளர்கள் உறுதியான நிலையில், பகுஜன் சமாஜ் கூட்டணி சார்பில் சத்வீர், களப்பணியில் தீவிரம் செலுத்தினார். நொய்டாவில் சாலையோரங்கள், சுவர்கள் போன்ற பொது சொத்துகளில் அவர் போஸ்டர் ஒட்டுவது, பேனர் பொருத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டார். தேர்தல் நடத்தை விதிமீறலான இந்த நடவடிக்கையில் அவர் ஈடுபட்டதை தேர்தல் ஆணையம் வீடியோ பதிவு செய்து, அதன் பேரில் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில், வேட்பாளர் மீது வழக்கு பாய்ந்திருப்பது அக்கட்சிக்கு அங்கு பிரசாரத்தில் தொய்வு ஏற்படுத்தி இருப்பதாக தெரிகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: