கஜா புயல் பாதிப்பிற்கு பிறகு வேதாரண்யத்தில் முட்டையிட்ட ஒரே ஒரு ஆலிவர் ரெட்லி ஆமை

வேதாரண்யம்: காஜா புயல் பாதிப்பிற்கு பிறகு வேதாரண்யம் பகுதியில் ஒரேஒரு ஆலிவர் ரெட்லி ஆமை மட்டும் முட்டையிட்டுள்ளது. வேதாரண்யம் கோடியக்கரை, மணியன்தீவு, புஷ்பவனம், ஆறுகாட்டுத்துறை ஆகிய பகுதிகளில் டிசம்பர் முதல் மார்ச் வரை பசிபிக் பெருங்கடலில் வசிக்கும் ஆலிவர்ரெட்லி ஆமைகள் இங்கு வந்து முட்டையிட்டு செல்வது வழக்கம். இதனை வனத்துறையினர் எடுத்து பாதுகாத்து கோடியக்கரை ஆறுகாட்டுத் துறையில் உள்ள ஆமை குஞ்சு பொறிப்பகத்தில் வைத்து 50 நாட்களுக்கு பிறகு குஞ்சு வெளிவந்த பிறகு அதை கடலில் ஆண்டுதோறும் விடுகின்றனர். இந்த ஆண்டு கஜா புயலின் தாக்கத்தால் இதுவரை முட்டையிடுவதற்கு ஆமைகள் வராத நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் வௌ்ளப்பள்ளம் கடற்கரை பகுதியில் ஒரே ஒரு ஆமை மட்டும் வந்து 124 முட்டைகளை இட்டு சென்றது.

அதனை அப்பகுதி மீனவர் ஸ்டீபன் சேகரித்து வனத்துறையிடம் ஒப்படைத்தார். அதனை வனத்துறையினர் ஆமை குஞ்சு பொறிப்பகத்தில் வைத்துள்ளனர். 55 நாட்கள் சென்று குஞ்சு பொறித்தவுடன் கடலில் விடப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர். இதுவரை கோடியக் கரை கடற்பகுதியில் 1982ம் ஆண்டு முதல் சென்ற ஆண்டு வரை சுமார் 2 லட்சம் ஆமைகள் குஞ்சுகள் சேகரிக்கப்பட்டு குஞ்சு பொறித்த பின் கடலில்  விடப்பட்டுள்ளது.  தாய் ஆமை எந்த கடற்கரையில் வந்து முட்டையிட்டு செல்கிறதோ அதே கடற்கரைக்கு 20ஆண்டுகள் வளர்ச்சி அடைந்த பிறகு இங்கு விடப்பட்ட ஆமைகள் மீண்டும் முட்டையிட வருகின்றன. அவ்வாறு வரும் ஆமைகள் கடலில் ஏற்படும் பல்வேறு இயற்கை மாற்றங்களாலும் பெரிய கப்பல், விசை படகு ஆகியவற்றில் அடிபடுவதினாலும் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான ஆமைகள் இறந்து கரை ஒதுங்குகின்றன.

இந்த ஆண்டு கஜா புயலின் தாக்கத்தால் புஷ்பவனம் கடற்கரை பகுதியில் கால்சியம் மிகுந்த சேறு கரை ஒதுங்கி உள்ளதால் ஆமைகள் முட்டையிடுவதற்கு அப்பகுதிக்கு வர வில்லை. மேலும் கோடியக்கரை முதல் வௌ்ளப்பள் ளம் வரை நாள்தோறும் ஆங்காங்கே முட்டையிட வரும் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கிய நிலையிலேயே உள்ளன. வழக்கமாக அக்டோபர், நவம்பர். டிசம்பர், ஜனவரி மாதம் வரை இப்பகுதியில் சுமார் 3000 முதல் 5000 வரை ஆயிரம் ஆமை முட்டைகளை வனத்துறையினர் சேகரித்து ஆமை குஞ்சு பொறிப்பகத்தில் வைப்பார்கள். ஆனால் இந்த ஆண்டு ஒரே ஒரு முட்டை கூட வனத்துறையினர் சேகரிக்கவில்லை. இதேநிலை நீடித்தால் அழிந்து வரும் இனமான இந்த ஆலிவர் ரெட்லி ஆமை இனத்தை பாதுகாப்பது என்பது கேள்விகுறியாகிவிடும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: