தென் சென்னை தொகுதியில் பொதுமக்கள் குறைகளை உடனடியாக தீர்ப்பேன்: திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் உறுதி

சென்னை: தென் சென்னை தொகுதியில் பொதுமக்களின் குறைகளை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுப்பேன் என்று திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார். தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் தொகுதி முழுவதும் வீடு வீடாக சென்று உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்து வருகிறார். அவர் செல்லும் இடங்களிலெல்லாம்  பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும், பூக்களை தூவியும் சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர். வார்டு வாரியாக பொதுமக்கள் மத்தியில் சென்று குறைகளை கேட்டு நிவர்த்தி செய்வதாக உறுதி அளித்து வருகிறார். மீனவர்கள், தொழிலாளர்கள், குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசிக்கும் மக்களை நேரில் சந்தித்து அவர்களுடன் அமர்ந்து அவர்களது பிரச்னைகளை கேட்டறிந்து வருகிறார். என்னை வெற்றி பெறச் செய்தால் உங்களின்  அனைத்து கோரிக்கைகளையும் நிவர்த்தி செய்வேன், என வாக்குறுதி அளித்து வருகிறார். அவரது செயல்பாடுகளை கண்டு பொதுமக்கள் உதயசூரியன் சின்னத்தில் எங்கள் வாக்குகளை அளிப்போம் என்று உறுதி அளித்து  வருகின்றனர்.

 இந்நிலையில், நேற்று 133வது வட்டத்துக்கு உட்பட்ட டாக்டர் ராகவன் காலனி, டாக்டர் சுப்பராய நகர் 4வது தெரு, மல்லிகைப்பூர் காலனி, வ.உ.சி.பிரதான சாலை, பாளையக்காரன் தெரு, என்எஸ்கே சாலை, கொய்யாத் தோப்பு  மற்றும் சக்கரபாணி தெரு, கிருபாசங்கர் தெரு, ஜானகிராமன் தெரு, ரயில்வே பார்டர் தெரு, அயோத்யா மண்டபம், சீனிவாச பிள்ளை தெரு, பக்தவச்சலம் தெரு, தம்மையா தெரு, ஆஞ்சநேயர் கோயில் தெரு உள்ளிட்ட பல்வேறு  பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.  அவருடன் திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன், தி.நகர் பகுதி செயலாளர் கருணாநிதி மற்றும் மதசார்பற்ற கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் உடன் சென்று உதயசூரியன் சின்னத்துக்கு ஆதரவு கேட்டு வாக்கு சேகரித்தனர்.  பிரச்சாரத்தின் போது, ‘‘பொதுமக்கள் எந்த நேரத்திலும் என்னை சந்தித்து குறைகளை சொல்லலாம். அதை உடனடியாக தீர்க்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன்’’ என்று உறுதியளிக்கிறேன் என்று பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: