தேனியில் 100% வாக்குபதிவை வலியுறுத்தி ராட்சத பலூன்: ஆட்சியர் பல்லவி பல்தேவ் பறக்கவிட்டார்

தேனி: தேனியில் 100 சதவீதம் வாக்குபதிவை வலியுறுத்தி ராட்சத பலூன் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நடத்தப்பட்டது. 17-வது நாடாளுமன்ற தேர்தல் வரும் 11-ம் தேதி தொடங்கி 7 கட்டமாக நடைபெறுகிறது. தமிழகத்தில் வருகின்ற 18-ம் தேதி நாடாளுமன்ற தேர்தலுடன் 18 தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இந்நிலையில், தேர்தல்களில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி தேனி பழைய பேருந்து நிலையம் அருகே 15 அடி சுற்றளவு கொண்ட ராட்சத பலூனை பறக்கவிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்பு ஏற்படுத்தப்பட்டது. இதனை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பல்லவி பல்தேவ் பறக்கவிட்டார். 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: