மயாமி ஓபன் டென்னிஸ் 4வது முறையாக பெடரர் சாம்பியன்

மயாமி: அமெரிக்காவில் நடைபெற்ற மயாமி ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர் சாம்பியன் 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் உள்ளூர் வீரரும் நடப்பு சாம்பியனுமான ஜான் ஐஸ்னருடன் மோதிய பெடரர் 6-1, 6-4 என்ற நேர் செட்களில் எளிதாக வென்று கோப்பையை முத்தமிட்டார். இப்போட்டி 1 மணி, 3 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது. மயாமி ஓபனில் 4வது முறையாக பட்டம் வென்றுள்ள பெடரர், தனது டென்னிஸ் வாழ்க்கையில் கைப்பற்றிய 101வது பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

மாஸ்டர்ஸ் 1000 அந்தஸ்து ஏடிபி தொடர்களில் அதிக பட்டம் வென்ற வீரர்கள் பட்டியலில் ரபேல் நடால் (33 பட்டம்), நோவாக் ஜோகோவிச் (32), ரோஜர் பெடரர் (28 பட்டம்) முதல் 3 இடங்களில் உள்ளனர். மயாமி ஓபனில் ஜோகோவிச், ஆந்த்ரே அகாசி தலா 6 முறை பட்டம் வென்று முன்னிலை வகிக்கின்றனர். பெடரர் (4) அடுத்த இடத்தில் உள்ளார். நடால் இங்கு ஒரு முறை கூட பட்டம் வென்றதில்லை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: