'பி.எம் நரேந்திர மோடி'படத்துக்கு தடைவிதிக்கக்கோரிய பொதுநல மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்

டெல்லி: மக்களவை தேர்தலுக்கு முன் வெளியிடப்படும் பி.எம் நரேந்திர மோடி படத்துக்கு தடைவிதிக்கக் கோரிய பொதுநல மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஏப்ரல் 11 முதல் மே 19ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், அனைத்துக் கட்சிகளும் வேட்புமனு தாக்கல் செய்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில் விவேக் ஓபராய் நடிப்பில் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு பிஎம் நரேந்திர மோடி’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாகியிருக்கிறது.

ஓமங்க் குமார் இயக்கும் இந்தப் படத்தை லெஜண்ட் குலோபல் சார்பில் சந்தீப் சிங் மற்றும் சுரேஷ் ஓபராய் இணைந்து, 23 மொழிகளில் தயாரித்துள்ளனர். பிஎம் நரேந்திர மோடி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அடுத்த மாதம் 5-ம் தேதி இந்தியா முழுவதும் திரையிட படக்குழுவினர் முடிவு செய்திருந்தனர். முதல் கட்ட ஓட்டுப்பதிவு நடப்பதற்கு ஒரு வாரம் முன்பாக இந்தப் படத்தை வெளியிடுவது என்பது தேர்தலில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்று பி.ஜே.பி. தவிர்த்த அரசியல்வாதிகள் குற்றம்சாட்டினர். இதனால், தேர்தலின் கடைசி கட்ட ஓட்டுப்பதிவு முடியும் வரை இந்தப் படத்தை வெளியிடாமல் ஒத்திவைக்கக் கோரி காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது.

இதற்கிடையே, தேர்தல் நடத்தை விதிமுறைகளை காரணம் காட்டி, நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் பி.எம். நரேந்திர மோடி படைத்தை திரையிட கூடாது என மும்பை, டெல்லி மற்றும் அலகாபாத் உயர்நீதி மன்றங்களில் சிலர் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில்,  பி.எம்.நரேந்திர மோடி படத்துக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்த டெல்லி உயர்நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்தது. இதனையடுத்து நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 5-ம் தேதி பி.எம்.நரேந்திர மோடி படம் வெளியாகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: