இலங்கை, மலேசியாவில் இருந்து கடத்தி வந்த ரூ.35.5 லட்சம் தங்கம் பறிமுதல்: ஆந்திர பயணி உட்பட 4 பேர் கைது

சென்னை: சென்னை விமான நிலையத்தில்  இலங்கை, மலேசியா போன்ற நாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.35.5 லட்சம் மதிப்புள்ள  தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, ஆந்திர பயணி உட்பட 4 பேரை கைது செய்தனர். இலங்கையில் இருந்து நேற்று அதிகாலை  2.30 மணிக்கு லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் சென்னை விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். அப்போது ஆந்திர மாநிலத்தை சேர்ந்த  சுரேஷ்பாபு (27) என்பவர், சுற்றுலா பயணிகள் விசாவில் சென்னை வந்திருந்தார். அவரது உடமைகளை சோதனை நடத்தியபோது, அதில் எதுவும் இல்லை. சந்தேகம் தீராத அதிகாரிகள் அவரை தனி அறைக்கு அழைத்து சென்று, ஆடைகளை கலைந்து சோதனை செய்தனர். அப்போது, அவருடைய உடலின் பின் பகுதியில்  ரப்பர் பாஞ்ச் மறைத்து வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டு பிடித்தனர். அதை எடுத்துப் பார்த்தபோது அதில் 265 கிராம் தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.9 லட்சம். அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரை கைது செய்தனர்.

இதேபோல், மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் நேற்று காலை 8.30 மணிக்கு சென்னை  சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சென்னையை சேர்ந்த ரஷீத் கான் (29) முகமது (32) ஆகியோர் சுற்றுலா பயண்கள் விசாவில்  மலேசியா சென்றுவிட்டு வந்திருந்தனர்.

சந்தேகத்தின் பேரில், அவர்களை தனியறைக்கு அழைத்துச் சென்று சோதனை நடத்தினர். இருவரின் உள்ளாடைகளுக்குள் தலா 300 கிராம் வீதம் மொத்தம் 600 கிராம் தங்க கட்டிகள் மறைத்து வைத்தனர். அவற்றை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர். இதேபோல் கோலாலம்பூரில் இருந்து  தனியார் ஏர்லைன் விமானம் நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை செய்தபோது, சென்னையை சேர்ந்த ராஜேஷ் (30)  மலேசியா நாட்டுக்கு சுற்றுலா பயணியாக சென்றுவிட்டு திரும்பி வந்தார். அவரை சுங்க அதிகாரிகள்  சோதனை செய்தபோது அவரது ஆசனவாயில் 210 கிராம் தங்க கட்டிகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அவற்றை பறிமுதல் செய்து, ராஜேஷை கைது செய்தனர். இவர்கள் மூவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.66.5 லட்சம். சென்னை விமான நிலையத்தில்  இலங்கை, மலேசியா பொன்ற நாடுகளில் இருந்து வந்த ஆந்திர பயணி உட்பட 4 பேரிடம் ரூ.35.5 லட்சம் மதிப்புள்ள  ஒருகிலோ 810 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: