பிரபல பாலிவுட் நடிகை ஜெயப்பிரதா தமிழில் சலங்கை ஒலி, நினைத்தாலே இனிக்கும், தசாவதாரம் உள்பட பல படங்களிலும் தென்னக மொழிப் படங்களிலும் நடித்து பிரபலமானவர். . 1994ல் என்.டி.ராமராவின் தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தா–்ர். பின்னர் சந்திரபாபு நாயுடு பிரிவில் இணைந்து, 1996ல் மாநிலங்களவைக்கு தேர்வானார். நாயுடுவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சமாஜ்வாடியில் சேர்ந்தார். உபி. மாநிலம் ராம்பூர் மக்களவை தொகுதியில் 2004 மற்றும் 2009ல் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்வானார். கடந்த வாரம் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். சேர்ந்த வேகத்திலேயே ராம்பூர் தொகுதி பாஜ வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். சமாஜ்வாடி கட்சி சார்பில் ராம்பூர் தொகுதியில் போட்டியிடுபவர் அசம் கான். தங்கள் கட்சி சார்பில் இதே தொகுதியில் போட்டியிட்டு எம்பி. ஆன ஜெயப்பிரதா இப்போது பாஜ சார்பில் எதிராக போட்டியிடுவது சமாஜ்வாடி கட்சியினருக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.