15 சதவீதம் துண்டு விழுது நேரடி வரி வசூல் பத்தல எதாவது செய்யுங்க ஆபீசர்ஸ்: வரிகள் ஆணையம் கோபம்

புதுடெல்லி: நிதியாண்டு நிறைவடையும் நிலையில், நேரடி வரி வசூல் இலக்கை விட 15 சதவீதம் குறைவாக உள்ளதாக மத்திய நேரடி வரிகள் ஆணையம் தெரிவித்துள்ளது. மத்திய நேரடி வரிகள் ஆணைய உறுப்பினர் நீனா குமார், வருமான வரித்துறை மண்டல அதிகாரிகளுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: நடப்பு நிதியாண்டுக்கான நேரடி வரி வசூல் இலக்காக பட்ஜெட்டில் ரூ.12 லட்சம் கோடி ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஆனால், இதில், கடந்த 23ம் தேதிப்படி ரூ.10,21,251 கோடி மட்டுமே வசூல் ஆகியுள்ளது. நிர்ணயித்த இலக்கில் 85.1 சதவீதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

 நிதியாண்டு இந்த மாதத்துடன் முடிய உள்ள நிலையில், 15 சதவீதம் பற்றாக்குறையாக உள்ளது. வருமன வரித்துறையில் வரி வசூல் பணியை கண்காணிக்கும் அதிகாரிதான், வரி வசூல் குறைவதற்கு பொறுப்பேற்க வேண்டும். தனிநபர், நிறுவனங்கள் மற்றும் முன்கூட்டிய வரி பிரிவுகளில் எந்த வசூல் குறைவாக உள்ளது என்பதை கண்டறிந்து துரிதப்படுத்த வேண்டும். வரி வசூல் 6.9 சதவீதம் குறைந்திருக்கிறது. அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். வரி வசூலுக்கு சாத்தியம் உள்ள அனைத்து வழிகளிலும் உடனடி நடவடிக்கை எடுத்து வசூல் இலக்கை எட்ட வேண்டும் என எச்சரித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: