சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் மற்றும் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மாயாறு வனப்பகுதியில் கடந்த 23 மற்றும் 24 ம் தேதிகளில் 10 குழுவினர் பாறுகழுகுகள் குறித்து கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த கணக்கெடுப்பு விபரத்தை சத்தியமங்கலம் புலிகள் காப்பக அதிகாரிகளிடம் சமர்ப்பித்தனர். இதில் மாயாற்றை ஒட்டியுள்ள வனப்பகுதியில் உள்ள உயரமான மரங்கள் மற்றும் பாறை பிளவுகள், முகடுகளில் வெள்ளை முதுகு பாறுகழுகுகளின் கூடுகள் அதிக அளவில் இருந்தது தெரிய வந்துள்ளது.