தீவிரவாத குழு தாக்குதல் மாலியில் பலி 160 ஆக உயர்வு

ஒகாசோகூ: மாலியில் டோகான் என்ற தீவிரவாத குழு நடத்திய கொடூர தாக்குதலில் பலி எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது.  மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலி நாட்டில் புலானி என்ற விவசாய குழுவினருக்கும், டோகான் என்ற தீவிரவாத குழுவினருக்கும் இடையே அடிக்கடி மோதல் நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் பொதுமக்கள் 500 பேர் கொல்லப்பட்டனர்.  இந்த நிலையில் மத்திய மாலி நாட்டின் மோப்டி நகரம் அருகேயுள்ள கிராமமான ஒகாசோகூவில் கடந்த சனிக்கிழமை டோகான் தீவிரவாத குழுவினர் திடீரென ஆயுதங்களுடன் புகுந்தனர். அவர்கள் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டும், அரிவாளால் வெட்டியும் அப்பகுதி மக்களை ெகாடூரமாக தாக்கினர். இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 136 பேர் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் நேற்று முன் தினம் அப்பகுதியை சேர்ந்த பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர், தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்தார். கிராமத்தில் பல வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்ட நிலையிலும்,  பல இடங்களில் பிணங்கள் குவியல் குவியலாக கிடந்ததாகவும்’ தகவல் வெளியாகியுள்ளது. நேற்று முன்தினம் சம்பவ இடத்தை பார்வையிட்ட மாலி அதிபர் இப்ராகிம் புபாகார் கேத்தா கூறுகையில், ‘‘கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளேன்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: