ராணிப்பேட்டையில் பறவைகள் சரணாலயமாக மாறிய காவல் நிலையம் : பொதுமக்கள் பரவசம்

ராணிப்பேட்டை: வேலூர்  மாவட்டம் ராணிப்பேட்டை காவல் நிலையம், போக்குவரத்து காவல் நிலையம்,  மகளிர் காவல் நிலையம் என 3 காவல் நிலையங்கள் உள்ளன. மேற்கண்ட காவல் நிலையங்களின் வளாகங்களில் பல ஆண்டுகளாக உள்ள இலுப்பை மரம், அரச மரம், வேப்ப  மரம், குல்மர்க் பூ மரம் உள்ளிட்ட பல்வேறு ரக மரங்கள் அதிகளவில் உள்ளன. இந்நிலையில்,  அண்டார்டிகா, ஆஸ்திரேலியா, ஜப்பான், சிங்கப்பூர், மலேஷியா உள்ளிட்ட  பல்வேறு நாடுகளிலிருந்து நைட்டிங் கேர்ள் (நீண்ட கால்கள் நீண்ட கழுத்துடன்)  பறவைகள், கொக்குகள் மற்றும் நாரைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான வெளிநாட்டு  பறவைகள் ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் உள்ள அக்டோபர், நவம்பர், டிசம்பர்,  ஜனவரி, மாதங்களில் வருகை புரிவது வழக்கம்.

இந்த வெளிநாட்டு பறவைகள் இங்குள்ள உள்ள பல்வேறு ரக  மரங்களில் தங்கி ஆண், பெண் பறவைகள் ஜோடி ஜோடியாக பல்வேறு கிராமங்களுக்கு சென்று சிறு, சிறு முட்கள் குச்சிகள் கொண்டு வந்து கூடு கட்டி முட்டைகளை  இட்டு குஞ்சுகளை பொரித்து இனப்பெருக்கம் செய்கின்றன. பின்னர் அந்த பறவைகள் ராணிப்பேட்டை, வடகால், தெங்கால் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள  ஏரிகளுக்கு சென்று அங்கு உள்ள நீரில் காத்து கிடந்து மீன்களை கவ்வி பிடித்துக்கொண்டு வானில் பறந்து செல்லும் காட்சி பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

மேலும் விவசாய நிலங்களில் உழவர்கள் உழும்போதும், நெல் அறுவடை செய்யும் போதும் அதில் வரும் புழுக்களையும் பிடித்து எடுத்து நாளடைவில் மேற்கண்ட ராணிப்பேட்டை காவல் நிலையங்களில் உள்ள பல்வேறு மரங்களில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பறவைகள் குஞ்சுகள் பொறித்து  இனப்பெருக்கம் செய்கின்றன. பறவைகளின் சரணாலயமாக மாறிவிட்ட ராணிப்பேட்டை காவல் நிலையம். இங்கு கூடு  கட்டி தங்கி உள்ள பல்வேறு வகை வெளிநாட்டு பறவைகளை தினமும் பொதுமக்கள்  பெண்கள் குறிப்பாக சிறுவர்கள் பள்ளி மாணவ, மாணவிகள் என பலரும் பார்த்து  பரவசமடைமந்து செல்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: