சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினரால் 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு வரும் மாவோயிஸ்டுகளை  ஒடுக்க பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஏராளமான மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர். எனினும் வனப்பகுதிகளில்  மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் இன்னமும் உள்ளது. இந்நிலையில், சுக்மா மாவட்டம் பீமாபுரம் பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சிஆர்பிஎப் வீரர்கள் அப்பகுதிக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும்  துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இந்த துப்பாக்கிச்சண்டைக்கு பிறகு மாவோயிஸ்டுகளின் 4 உடல்களை பாதுகாப்பு படையினர் மீட்டனர். சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளிடம் இருந்து  3 துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களையும் பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். மேலும் மாவோயிஸ்டுகள் அப்பகுதியில் உள்ளனரா? என்று பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல்  வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: