மதுரைப்பாக்கத்தில் உள்ள காப்பு காட்டில் திடீர் தீவிபத்து: 6 ஏக்கர் மரங்கள் எரிந்து நாசம்

தாம்பரம்:தாம்பரம் அடுத்த மதுரைப்பாக்கம், கோவிலாஞ்சேரி, பொன்மார் ஆகிய பகுதிகளில் பல ஏக்கர் பரப்பில் காப்பு காடு உள்ளது. இங்கு தைலமரங்கள் உள்ளிட்ட பல்வேறு மரங்கள் அதிகளவில் உள்ளன.  முள்ளம்பன்றி, குரங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில், நேற்று மதியம் இந்த காப்பு காட்டில் திடீர் என தீவிபத்து ஏற்பட்டது. காற்றில் தீ மளமளவென பரவி மரங்கள் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. தகவலறிந்து தாம்பரம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து 2 வாகனங்களில் 6 வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ முற்றிலும்  அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் இருந்த தைலமரங்கள் எரிந்து நாசமானது.

ஒவ்வொரு வருடமும் கோடை காலங்களில் இங்கு இதுபோல தீ விபத்து ஏற்படுகின்றது. எனவே இங்கு தீ விபத்து ஏற்படாமல் இருக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தீவிபத்துக்காண காரணம் குறித்து சேலையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: