தேர்தல் முடியும் வரை விவசாயிகள் கடனை வங்கிகள் வசூலிக்க கூடாது: தேர்தல் அதிகாரியிடம் பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை

சென்னை: தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை சந்தித்து மனு அளித்தார். அதில் கூறி இருப்பதாவது: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. 5 ஆண்டுகளாக வறட்சி, புயல் போன்ற இயற்கை சீற்றங்களால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான மாவட்டங்கள் தற்போது வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பின்பற்றி கடன் வசூல் உடனே நிறுத்தப்பட வேண்டும் என்பது சட்ட நடைமுறை ஆகும்.

தற்போது தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால் அனைத்து நிர்வாகங்களும் தேர்தல் ஆணைய கட்டுப்பாட்டில் உள்ளது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு கல்வி, விவசாயிகள் கடன் வசூல் என்ற பெயரில் மாணவர்களையும், விவசாயிகளையும் வங்கிகள் அச்சுறுத்துகிறது. எனவே, தலைமை தேர்தல் அதிகாரி இதில் தலையிட்டு தேர்தல் முடியும் வரை வங்கிகள் வசூல் செய்வதை ரிசர்வ் வங்கி கவனத்திற்கு கொண்டு சென்று தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: