18 சட்டப்பேரவை தொகுதிக்கும் அறிவிப்பு மக்கள் நீதி மய்ய கட்சி 2வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு : தென்சென்னையில் ரங்கராஜன் போட்டி

கோவை: கோவை கொடிசியா மைதானத்தில் மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டம் மற்றும் வேட்பாளர்கள் அறிமுக விழா நேற்று இரவு நடந்தது. இதில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் கலந்து கொண்டு மக்களவை மற்றும் சட்டமன்ற இடைதேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 18 பேரை அறிவித்தார்.  இடைத்தேர்தலில், பொன்மலையில் பூவை ஜெகதீசன், பெரம்பூரில் பிரியதர்சினி, திருப்போரூரில் இந்திய குடியரசு கட்சியின் கருணாகரன், சோளிங்கரில் இந்திய குடியரசு கட்சியின் மலைராஜன், குடியாத்தம் ெதாகுதியில் இந்திய குடியரசு கட்சியின் வெங்கடேசன், ஆம்பூரில் நந்தகோபால், ஒசூரில் ஜெயபால், பாப்பிரெட்டிபட்டியில் நல்லதம்பி, ஒசூரில் குப்புசாமி, நிலக்கோட்டையில் சின்னதுரை, திருவாரூரில் அருண் சிதம்பரம், தஞ்சாவூரில் வளரும் தமிழக கட்சி வேட்பாளர் துரையரசன், மானாமதுரையில் ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டியில் வளரும் தமிழகம் கட்சி தங்கவேல், பெரியகுளத்தில் பிரபு, சாத்தூரில் சுந்தரராஜ், பரமக்குடியில் உக்கிரபாண்டியன், விளாத்திகுளத்தில் தமிழ் விவசாயிகள் சங்க வேட்பாளர் நடராஜ் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டது.

இதேபோல் மக்களவைக்கு போட்டியிடும் இரண்டாவது பட்டியலை கமலஹாசன் வெளியிட்டார். இதில் காஞ்சிபுரத்தில் தங்கராஜ், திருவண்ணாமலையில் அருள், ஆரணியில் ஷாஜி, கள்ளக்குறிச்சியில் கணேஷ், நாமக்கல்லில் தங்கவேலு, ஈரோட்டில் சரவணக்குமார், ராமநாதபுரத்தில் விஜயபாஸ்கர், கரூரில் ஹரிகரன், பெரம்பலூரில் அருள் பிரகாசம், தஞ்சாவூரில் சம்பத் ராமதாஸ், சிவகங்கையில் கவிஞர் சினேகன், மதுரையில் அழகர், தென் சென்னையில் ரங்கராஜன், கடலூரில் அண்ணாமலை, விருதுநகரில் முனியசாமி, தென்காசியில் முனீஸ்வரன், திருப்பூரில் சந்திரகுமார், பொள்ளாச்சியில் மூகாம்பிகை ரத்தினம், கோவையில் மகேந்திரன் ஆகிய 19 பேர் போட்டியிடுவார்கள்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: