அரசுப்பணியில் இருந்த பாமக வேட்பாளருக்கு சொந்தமாக வீடு, இடம் இல்லையாம்: 19.25 லட்சம் மட்டுமே உள்ளதாக வேட்புமனுவில் தகவல்

அதிமுக கூட்டணியில் விழுப்புரம் மக்களவை தொகுதியில் பாமக வேட்பாளர் வடிவேல் ராவணன் போட்டியிடுகிறார். நேற்று தேர்தல் நடத்தும்  அலுவலராக ஆட்சியர் சுப்ரமணியனிடம் வேட்புமனுதாக்கல் செய்தார். அதில் தனது சொத்துவிவரத்திற்கான பக்கத்தில், அசையும் சொத்தும் எதுவும்  கிடையாது என்று குறிப்பிட்டுள்ளார்.

 சொந்தமாக வீடோ, ஒரு சென்ட் இடமோ கிடையாது என்று குறிப்பிட்டுள்ளார். தனது பெயரில் வங்கியில் 4.50 லட்சம் பணமும், மனைவி பெயரில்  3 லட்சம் ரொக்கம் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் வடிவேல் ராவணணுக்கு சொந்தமாக 25 பவுன் நகையும்(6.75 லட்சம்), மனைவியிடம் 20  பவுன்(5 லட்சம்) நகை மட்டும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

நகை, ரொக்கம் என மொத்தம் 19.25 லட்சம் மட்டுமே இருப்பதாக தெரிவித்துள்ளார். வடிவேல் ராவணவன் அரசியலுக்கு வருவதற்கு முன்பு தமிழ்நாடு அரசுத்தேர்வாணையம், தலைமைச்செயலகம் உள்ளிட்ட துறையில் அரசுப்பணியில்  இருந்துள்ளார். மேலும் திருச்சி வானொலிநிலையத்தில் செய்திவாசிப்பாளர், நிகழ்ச்சிதொகுப்பாளராகவும் பணியாற்றிவந்துள்ளார். கல்லூரியில்  விரிவுரையாளராகவும் பணியாற்றிய வடிவேல்ராவணணுக்கு ஒரு சென்ட் இடம் கூட சொந்தமாக இல்லை என்று வேட்புமனுதாக்கல் மனுவில்  கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: