பெண் நடன இயக்குனர் கலா அமமுக கட்சியில் இணைந்தார்

சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல பெண் நடன இயக்குநர் கலா நேற்று அமமுக-வில் இணைந்தார். கலா தமிழ் சினிமாவின் பிரபல பெண் நடன இயக்குநர்களில் ஒருவராவார். டிவி நிகழ்ச்சிகளிலும் நடுவராக இருந்து வருகின்றார். இந்தநிலையில், டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் கலா தன்னை நேற்று உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தலைவர் என்றால் அவர் நம் மனத்திற்குப் பிடித்தவராக இருக்க வேண்டும். அந்த வகையில் டிடிவி தினகரன் எனக்கு பிடித்த தலைவர். அவரது செயல்பாடுகளும், அதில் வெளிப்படும் நேர்மைத்தனமையும் என்னைக் கவர்ந்து விட்டது.நான் 30 வருடங்களாக திரைத்துறையில் இருந்தவள். என்னிடம் ஒரு பொறுப்பு கொடுக்கப்பட்டால் அதைத் திறம்படச் செய்வேன். இவ்வாறு கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: