கொடநாடு கொலை வழக்கில் கைதான சயான் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

ஊட்டி: கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான சயான் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள கொடநாடு பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலாவுக்கு ெசாந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. இந்த எஸ்டேட்டில், கடந்த 24.4.2017ம் தேதியன்று கொலை செய்யப்பட்டு கொள்ளை சம்பவம் நடந்தது. இவ்வழக்கில் தொடர்புடைய 11 பேரில் சேலம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். சயான், வாளையார் மனோஜ் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீதான வழக்கு ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில், 10 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், கொலை வழக்கில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு உள்ளதாக சயானும் வாளையார் மனோஜும் தெரிவித்தனர். இதையடுத்து, இவர்களின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என ஊட்டி நீதிமன்றத்தில் அரசு மனுதாக்கல் செய்தது. இதையேற்று, 2 பேரின் ஜாமீன் மனுவை ரத்து செய்தது. தற்போது இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். எனினும், 2 பேரும் மீண்டும் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தனர். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சயான் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: