பீகார் மாநிலத்தில் ராஷ்டிரிய ஜனதா தள கூட்டணியில் காங்கிரசுக்கு 9 மக்களவை தொகுதி ஒதுக்கீடு

பாட்னா :  பீகார் மாநிலத்தில் நீண்ட இழுபறிக்கு இடையே காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. நாட்டின் 17வது மக்களவை தேர்தல் வருகிற ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. பீகார் மாநிலத்தில் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நிலவியதாக கூறப்பட்டது. இந்நிலையில் பீகாரில் மொத்தம் உள்ள 40 இடங்களில் லாலு தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தள கூட்டணியில் காங்கிரசுக்கு 9 மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனை பீகார் ஆர்.ஜே.டி தலைவர் ராம் சந்திரபாவ் அறிவித்தார். பீகாரில் லாலு தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் 20 இடங்களில் போட்டியிடுகிறது. மீதமுள்ள தொகுதிகள் முன்னாள் மத்திய அமைச்சர் உபேந்திர குஷ்வாகாவின்  ராஷ்டிரிய லோக் சமதா கட்சி, பீகார் மாநில முன்னாள் முதல்வர் ஜிதன்ராம்  மாஞ்சியின் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா உள்ளிட்ட கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது. முன்னதாக ஜிதன்ராம் மாஞ்சி கூறுகையில், கூட்டணியில் எனது கட்சிக்கு 5 இடங்களை ஒதுக்க கோரினோம். தற்போது கூட்டணியின் நலனுக்கு ஏற்ப அதிக இடங்களை கேட்கவில்லை. ஆனால் உபேந்திர குஷ்வாகாவின் ஆர்.எல்.எஸ்பி கட்சியை விட ஒரு இடமாவது கூடுதலாக கிடைக்கவேண்டும் அவ்வளவுதான் என தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: