மக்களவை தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான அமமுக இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சென்னை: தமிழகத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி 40 மக்களவைத் தொகுதிக்கும் 18 சட்டப்பேரவைத் தொகுதிளுக்கு இடைத் தேர்தலும் நடைபெற உள்ளது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார். அதன்படி வடசென்னை - சந்தான கிருஷ்ணன், அரக்கோணம் - பார்த்திபன், வேலூர் - பாண்டுரங்கன், கிருஷ்ணகிரி - கணேசகுமார், தருமபுரி - பழனியப்பன், திருவண்ணாமலை - ஞானசேகர், ஆரணி - செந்தமிழன், கள்ளக்குறிச்சி - கோமுகி மணியன். திண்டுக்கல் - ஜோதிமுருகன், கடலூர் - கார்த்திக், தேனி - தங்கதமிழ்செல்வன், விருதுநகர் - பரமசிவ ஐய்யப்பன், தூத்துக்குடி - புவனேஸ்வரன், கன்னியாகுமரி - லெட்சுமணன் ஆகியோர் வரும் மக்களவைத் தேர்தலில் அமமுக சார்பில் வேட்பாளர்களாக களமிறக்கப்படுவார்கள் என டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். தேனி மக்களவை தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனை எதிர்த்து தங்க தமிழ்ச்செல்வன் களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதே போல 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன் விவரம் பின்வருமாறு: சோளிங்கர் - டி.ஜி.மணி, பாப்பிரெட்டிபட்டி - ராஜேந்திரன், நிலக்கோட்டை - தங்கதுரை, திருவாரூர் - எஸ்.காமராஜ், தஞ்சாவூர் - ரெங்கசாமி, ஆண்டிப்பட்டி - ஜெயக்குமார், பெரியகுளம் - கே.கதிர்காமு, விளாத்திகுளம் - ஜோதிமணி, புதுவை மாநில தட்டஞ்சாவடி சட்டமன்ற இடைத்தேர்தலில் ந.முருகசாமி உள்ளிட்டோர் போட்டியிட உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: