காங்கிரஸ் வேட்பாளராகும் பாஜ எம்.பி. சத்ருகன் சின்கா

பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னா மக்களவை தொகுதியில் பாஜ எம்.பி.யான சத்ருகன் சின்கா காங்கிரஸ் சார்பில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகராக இருந்து அரசியலில் நுழைந்த சத்ருகன் சின்கா, கடந்த 2014ம் ஆண்டு பாஜ சார்பில் பாட்னா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போது மக்களவை தொகுதி உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், அவர் மோடி அரசுக்கு எதிராக அவ்வபோது கருத்துக்களை கூறிவந்தார். மேலும், எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடியை குறை கூறி நடத்திய பிரசார மேடைகளிலும் அவர் இடம் பிடித்து வந்தார். இதனால் பாஜ தலைமையின் அதிருப்திக்கு உள்ளானார் சின்கா.

இதனால், பாட்னா தொகுதியில், அவருக்கு பதிலாக தற்போது மத்திய அமைச்சராக பதவி வகிக்கும் ரவிசங்கர் பிரசாத்தை வேட்பாளராக களமிறக்க அக்கட்சி தலைமை முடிவு செய்துள்ளது. இருந்தபோதிலும், பாட்னா தொகுதியை விட்டுக்கொடுக்கும் நிலையில் சத்ருகன் சின்கா இல்லை. இதனால், வரும் தேர்தலில் அவர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக தங்கள் கட்சி சார்பில் பாட்னா தொகுதியில் போட்டியிட ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பிலும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாகவும், அதனை ஏற்க மறுத்த சின்கா காங்கிரஸ் சார்பில் போட்டியிட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: