இபிஎஸ், ஓபிஎஸ் கையெழுத்திடும் விவகாரம் கேசி.பழனிசாமி கோரிக்கை மீண்டும் நிராகரிப்பு: டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: வேட்பாளர் படிவத்தில் கையெழுத்திட இபிஎஸ், ஓபிஎஸ் தரப்புக்கு அதிகாரம் உண்டா? என்பது தொடர்பான வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்ற கேசி.பழனிசாமிகோரிக்கையை இரண்டாவது முறையாக நிராகரித்தது டெல்லி உயர்நீதிமன்றம். அதிமுக கட்சியில் இருந்து கடந்த ஆண்டு நீக்கப்பட்ட கேசி.பழனிசாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில்,வேட்பாளர்கள் தரப்பில் பூர்த்தி செய்து தரப்படும் அதாவது ஏ மற்றும் பி விண்ணப்பத்தில் பொதுச்செயலாளர் மட்டும் தான் கையெழுத்து போடும் அதிகாரம் உள்ளது. அதனால் வேட்பாளர் படிவத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமிக்கு கையெழுத்திட தடை விதிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.

 மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம் மார்ச்.28ம் தேதி விசாரிப்பதாக உத்தரவிட்டது. ஆனால் மார்ச்.25ம் தேதிக்குள் வழக்கை விசாரித்து ஒரு இறுதி உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என கேசி.பழனிசாமி கோரிக்கை வைத்திருந்தார். இந்த  மனுவானது டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யோகேஷ் கண்ணா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி உத்தரவில், மேற்கண்ட மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க முடியாது. வேட்பாளர் மனு தாக்கல் செய்வது 26ம் தேதி வரை உள்ளதால் அதற்கான அவசியம் தற்போது கிடையாது. முந்தைய உத்தரவின்படி வழக்கு வரும் 28ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நேற்று உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: