வரி ஏய்ப்பு புகார்..: வேல்ஸ் கல்விக்குழுமத்திற்கு தொடர்புடைய 30 இடங்களில் வருமானவரி சோதனை

சென்னை: வரி ஏய்ப்பு மற்றும் கருப்பு பண பரிமாற்றம் புகார் காரணமாக வேல்ஸ் கல்விக்குழுமத்திற்கு தொடர்புடைய 30 இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்திற்கு ஏற்ப வரியை அரசுக்கு செலுத்தாத நபர்களை கண்டறிந்து, அவர்களிடம் இருந்து வரியைப் பெறும் நடவடிக்கையில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். சமீப காலமாக தமிழகத்தின் பெரிய முதலாளிகளை குறிவைத்து, வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. தேர்தல் நேரம் என்பதால், சற்று பரபரப்பு கூடியுள்ளது. இந்த நிலையில், வேல்ஸ் கல்விக்குழுமத்திற்கு தொடர்புடைய 30 இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வேல்ஸ் குழுமத் தலைவர் ஐசரி கணேஷ் வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து பேசிய வருமானவரித்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகள், ஏற்கனவே, 2 மாதங்களுக்கு முன்னர் கட்டுமான நிறுவனத்தில் வரி ஏய்ப்பு புகார் காரணமாக சோதனை நடத்தப்பட்டது. அநத சோதனையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் அடுத்தக்கட்டமாக வேல்ஸ் குழுமம் சம்பந்தப்பட்ட 30 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக கூறியுள்ளனர். அதுமட்டுமல்லாது, வரி ஏய்ப்பு சம்மந்தமாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளதால் சோதனை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர். சென்னையில் 27 இடங்களிலும் அதேபோல தெலுங்கானாவில் உள்ள அவரது அலுவலகம் உள்ளிட்ட 3 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையில் சுமார் 120 வருமானவரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டிருப்பதாகவும், இந்த சோதனையானது விரிவடைய வாய்ப்பிருப்பதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: